Home இலங்கைபுதிய கடற் படைத் தளபதிக்கு ஒரு மாத காலமே சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது

புதிய கடற் படைத் தளபதிக்கு ஒரு மாத காலமே சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புதிய கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னய்யாவிற்கு ஒரு மாத காலமே சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி ட்ரவிஸ் சின்னய்யாவிற்கு 55 வயது பூர்த்தியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது பதவிக் காலத்தை ஒரு மாதத்திற்கு மட்டுமே நீடித்துள்ளார்.

கடற்படைத் தளபதியின் பதவி;க் காலத்தை ஓராண்டு வரையில் நீடிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்த போதிலும் அவர் ஒரு மாத காலத்திற்கு மட்டுமே பதவிக் காலத்தை நீடித்துள்ளார். இந்தநிலையில் பதவிக் காலம் மேலும் நீடிக்கப்படுமா இல்லையா என்பது இன்னமும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More