Home இலங்கைநியமனம் கோரி தொண்டராசிரியர்கள் போராட்டம்

நியமனம் கோரி தொண்டராசிரியர்கள் போராட்டம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களால் கடமையாற்றியோரில் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க மத்திய கல்வி அமைச்சால் அனுமதிக்கப்பட்ட 182 பேரின் நியமனத்தை இந்த மாத இறுதிக்குள் வழங்க வடக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என  தொண்டராசிரியர்கள் இன்று வடக்கு மாகாண சபைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமாகாண சபை அமர்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றுக்கொண்டிருந்த போது, நேர்முகத் தேர்வில் தோற்றி ஆசிரிய நியமனத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 182 தொண்டராசிரியர்கள் தமக்கான நியமனத்தை வடமாகாண சபை உறுப்பினர்கள் தடுப்பதாக குற்றஞ்சாட்டி கவனவீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

தொண்டராசியர்களுக்கான நேர்முகத் தேர்வில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட போதிலும் 182 பேரை மத்திய கல்வி அமைச்சு தெரிவு செய்திருந்தது. 182 தொண்டராசிரியர்களின் தெரிவில் குளறுபடிகள் இருப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கூறி, உறுப்பினர்களுக்கிடையில் உள்ள விரோதம் காரணமாக எமது நியமனத்தை இடைநிறுத்திவைத்துள்ளனர்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தமது விரோதங்களை நிறுத்தி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தொண்டராசியர்களாகக் கடமையாற்றிய எமக்கு உடனடியாக நியமனத்தைத் தருமாறு கோருகின்றோம். அத்துடன், நேர்முகத் தேர்வில் தோற்றி தெரிவு செய்யப்படாத தொண்டராசிரியர்களுக்கும் நியமனம் வழங்குவதற்காக நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வலியுறுத்துகின்றோம்’ என்று போராட்டாத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

அத்துடன் இம்மாத இறுதிக்குள் தொண்டராசிரியர்களின் நியமனங்களை உடனடியாக வழங்கி பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளனர். தமக்கான நியமனம் கிடைக்காவிடின் தொடர்ந்தும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தொண்டராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More