குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில் தொடரும் கனமழையினால் 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளாதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரையில் 2ஆயிரத்து 518 குடும்பங்களை சேர்ந்த 9 ஆயிரத்து 141 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் 04 வீடுகள் முழுமையாகவும் , 159 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.
உடுவில் பிரதேச செயலக பிரிவில் 106 குடும்பங்களை சேர்ந்த 385 பேரும் , ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 40 குடும்பங்களை சேர்ந்த 137 பேரும் , காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 08 குடும்பங்களை சேர்ந்த 27 பேரும் , யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் 55 குடும்பங்களை சேர்ந்த 209 பேரும் , நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 146 குடும்பங்களை சேர்ந்த 552 பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 249 குடும்பங்களை சேர்ந்த 893 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அத்துடன் சங்கானை பிரதேச செயலக பிரிவில் 273 குடும்பங்களை சேர்ந்த 1 066 பேரும் , சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 128 குடும்பங்களை சேர்ந்த 444 பேரும் , தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவில் 393 குடும்பங்களை சேர்ந்த 1, 253 பேரும் , சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 189 குடும்பங்களை சேர்ந்த 759 பேரும் , பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 283 குடும்பங்களை சேர்ந்த 1, 045 பேரும் , மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 643 குடும்பங்களை சேர்ந்த 2 , 382 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதேவேளை மழை தொடர்ந்தும் நீடிக்குமாயின் யாழ்.மாவட்ட தாழ் நில பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.