Home இலங்கைதமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுகமும்

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுகமும்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுகமும் நல்லூர் இளங்கலைஞர் மன் றத்தில் இன்று புதன் கிழமை காலை நடைபெற்றது.

இதன் போது ஈபிஆர்எல்எப் தலைவர் சரேஸ் பிரேமச்சந்திரன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி தமது கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும், ஈரோஸ், புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் இணைத்து தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பென்ற புதிய கட்சியை ஆரம்பித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இன்றைய நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆனந்தசங்கரி மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More