Home உலகம்தடை விதிக்கப்பட்ட ரஸ்ய வீர வீராங்கனைகளின் மேன்முறையீடு குறித்து பரிசீலனை

தடை விதிக்கப்பட்ட ரஸ்ய வீர வீராங்கனைகளின் மேன்முறையீடு குறித்து பரிசீலனை

by admin


குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
தடை விதிக்கப்பட்ட ரஸ்ய வீர வீராங்கனைகளின் மேன்முறையீடு தொடர்பில் பரிசீலனை செய்யப்பட உள்ளது. விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் ( The Court of Arbitration for Sport ) இந்த மேன்முறையீடுகளை பரிசீலனை செய்ய உள்ளது.

39 ரஸ்ய நாட்டு வீர வீராங்கனைகள் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளனர். ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் பல ரஸ்ய நாட்டு வீர வீராங்கனைகளுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

(The Court of Arbitration for Sport)

கடந்த 2014ம் ஆண்டில் சோச்சியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது ரஸ்ய வீர வீராங்கனைகள் ஊக்க மருந்து பயன்படுத்தினர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பல வீர வீராங்கனைகளின் பதக்கங்களும் மீளப் பறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More