Home இலங்கைஹம்பாந்தோட்டை துறைமுகம் வெளிநாட்டு கடற்படையினருக்கு வழங்கப்படாது :

ஹம்பாந்தோட்டை துறைமுகம் வெளிநாட்டு கடற்படையினருக்கு வழங்கப்படாது :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை துறைமுகம் வெளிநாட்டு கடற்படையினருக்கு வழங்கப்படாது என இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கைக் கடற்படைத் தளபதி அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தன தற்போது இந்தியாவிற்கான பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் அவர் ஹம்பாந்தோட்டை துறைமுகம் எந்தவொரு வெளிநாட்டு கடற்படையினரின் பயன்பாட்டுக்கும் வழங்கப்படாது என இந்திய அரசாங்கத்திடம் அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இந்தியாவின் பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என குறிப்பிட்டுள்ள கடற்படைத் தளபதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் இலங்கைக் கடற்டையினரால் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More