Home உலகம்உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று நாளை ஆரம்பம்..

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று நாளை ஆரம்பம்..

by admin


மேற்கிந்தியத்தீவுகள் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று நாளை சிம்பாப்வேயில் ஆரம்பமாகவுள்ளது. 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் முதல் 8 இடங்களில உள்ள தென்ஆபிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஸ், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்தநிலையில் ஏனைய 3 அணிகளும் தகுதிப் போட்யின் அடிப்படையில் தெரிவு செய்யப்படவுள்ளன. இந்தப் தகுதிச்சுற்றுப் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 25ம் திகதி வரை நடைபெறஉள்ளது.

தகுதி சுற்றில் போட்டியிடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.  இறுதியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டி முன்னேறுவதுடன், உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More