குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அணுத் திட்டம் குறித்துது ஈரான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஈரானிய ஜனாதிபதி ஹசன் ராவ்வானியுடன் பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஈரானுடனான அணுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என பிரான்;ஸ், பிரித்தானியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
எவ்வாறெனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டராம்பின் கருத்துக்களையும் முழுமையாக உதாசீனம் செய்துவிட முடியாது எனவும் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஈரானிய அணுத் திட்டம் குறித்து புதிய பேச்சுவார்த்தை நடாத்த திட்டமிட்டுள்ளதாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார். ரஸ்யா மற்றும் பாதுகாப்பு பேரவையின் ஏனைய உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.