Home சினிமாவில்லியாக நடிக்கத் தொடங்கியுள்ள சிம்ரன்

வில்லியாக நடிக்கத் தொடங்கியுள்ள சிம்ரன்

by admin


தமிழில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நாயகியாக நடித்த முன்னணி நடிகையாக காணப்பட்ட சிம்ரன், தற்போது திரைப்படங்களில் வில்லி கதா பாத்திரத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.  சிம்ரன் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த படம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. ஒன்ஸ்மோர், நட்புக்காக, பார்த்தேன் ரசித்தேன் ஆகிய படங்களில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படங்கள் அத்தனையும் பெரும் வெற்றி பெற்றன. சிம்ரன் மிகவும் பிரபலமாக இருந்தபோது இத்தகைய எதிர்பார்ப்பு காரணமாக வில்லத்தனமான நாயகி வேடங்களே அவருக்கு அதிகமாக வந்தன.  மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள சிம்ரன் ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக நடித்துள்ளார். காளீஸ்வரி என்னும் கதாபாத்திரத்தில் அதிரடி வில்லியாக நடித்துள்ள சிம்ரனுக்கு தொடர்ந்து வில்லி வேடங்கள் வருகின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More