Home உலகம்சோமாலியாவில் அமெரிக்க வான்வழி தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி

சோமாலியாவில் அமெரிக்க வான்வழி தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி

by admin


சோமாலியாவின் தலைநகர் மொகடீ அருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 60க்கு மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சோமாலியாவின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாத அமைப்பான அல் ஷபாப் அமைப்புக்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன.  சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.

உள்நாட்டில் தாக்குதல்களை நடத்திவரும் இந்த தீவிரவாத அமைப்பு மத்திய ஆபிரிக்காவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவரும் சர்வதேச அமைதிப் படையினர் மீதும் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில், மொகடீ அருகேயுள்ள தீவிரவாதிகள் முகாம் மீது நேற்று சோமாலியா அரச படைகளுடன் இணைந்து அமெரிக்கா ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More