Home உலகம்கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 43 பேர் பலி

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 43 பேர் பலி

by admin

மத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கொங்கோவில்; உள்ள தனியாருக்குச் சொந்தமான தாமிரச் சுரங்கம் ஒன்னறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்த சுரங்கத்தில் இருந்து கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் நிரந்தர அடிப்படையிலும் ஒப்பந்த அட்டிப்படையிலும் பல நூற்றுக்கணகான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்ற நிலையில் நேற்றுமுன்தினம் எதிர்பாராத விதமாக சுரங்கத்துக்குள் மண்சரிவு ஏற்பட்டதில் பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் மற்றும் ரானுவத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.  சுரங்கத்தினுள் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆபிரிக்க நாடுகளில் உள்ள சுரங்களில் கனிம வளங்களை வெட்டி எடுக்கும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது    #கொங்கோ , #சுரங்கம் #விபத்து  #பலி #congo #mine collapse

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More