யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் மூன்றாம் வருடத்தில் கற்று வந்த வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் (வயது 23) எனும் மருத்துவ பீட மாணவன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் பெற்றோர் சந்தேகம் தெரிவித்தமையால் , மாணவனின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. #மருத்துவபீட #இளங்குன்றன் #சந்தேகம் #இரத்தமாதிரிகள்