Home இலங்கைவயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் சடலமாக மீட்பு!

வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் சடலமாக மீட்பு!

by admin

யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சாந்தினி எனும் 63 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும், நேற்றைய தினம் (10.04.24)  செவ்வாய்க்கிழமை வீட்டில் சடலமாக காணப்பட்டதை அயலவர்கள் கண்ணுற்று காவற்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

காவற்துறையினர்  சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More