குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
ரொமானியாவின் முன்னாள் முதனிலை டென்னிஸ் வீரர் லீ நாஸ்ரேஸ் ( Ilie Nastase ) க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச டென்னிப் பேரவையினால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2021ம் ஆண்டு வரையில் லீ உத்தியோகபூர்வமாக டென்னிஸ் போட்டிகளில் எதனையும் செய்யக் கூடாது என அறிவித்துள்ளது.
பிரபல டென்னிஸ் வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், பிரிட்டனின் ஜொகானா கொன்ரா ( Johanna Konta ) ஆகியோருக்கு எதிராக கடுiமாயன விமர்சனங்களை வெளியிட்டதாக லீ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போட்டி நடுவரை திட்டியமை, வீராங்கனைகளை தரக்குறைவாக நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் 70 வயதான லீ பத்தாயிரம் அமெரிக்க டொலர்களை அபராதமாக செலுத்த வேண்டுமெனவும் உத்;தரவிடப்பட்டுள்ளது.