Home விளையாட்டுமேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வலுவான நிலையில்

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வலுவான நிலையில்

by admin
பெமிங்ஹாமில் நடைபெற்றுவரும் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவின்போது இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 348 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் முதலாவது பகல் – இரவு டெஸ்ட் போட்டியான இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்திருந்தது. ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறியபோதும் அலிஸ்ரயர் குக்  மற்றும் அணித்தலைவர் ஜோ ரூட் பெற்ற சதங்களின் உதவியோடு 348 என்ற வலுவான ஓட்ட எண்ணிக்கையை இங்கிலாந்து அணி பெற்றுள்ளது.
நேற்றைய முதல் நாள் நிறைவின்போது அணித்தலைவர் ஜோ ரூட் ஆட்டமிழக்க 136 ஓட்டங்களோடு, டீ.ஜே.மலன் 28 ஓட்டங்களோடும், அலிஸ்ரயர் குக் 153 ஓட்டங்களோடும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More