Home இலங்கைஅரசியலமைப்பில் மாற்றம் செய்யும் அரசின் செயற்பாடு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் – நாமல்

அரசியலமைப்பில் மாற்றம் செய்யும் அரசின் செயற்பாடு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் – நாமல்

by admin


அரசியலமைப்பில் மாற்றம் செய்து விளையாடும் இவ்வரசின் செயற்பாடு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தவல்லதென   பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.  அரசாங்கமானது  மூன்று மாகாண சபைகளினதும் காலங்கள் நிறைவடையவுள்ளதால், அக் காலத்துக்கு முன்பு தேர்தலை நடத்தாமல் தடுப்பதற்கு முயற்சிகளை  மேற்கொண்டுவந்தது எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை தற்போதைய ஜனாதிபதியின் ஊராக இருந்த போதிலும் அண்மையில் நடைபெற்ற பொலன்னறுவை கூட்டுறவு சங்க தேர்தலில் இவ்வரசினர் படு தோல்வியை சந்தித்தனர் எனவும் ஒரு ஆட்சியிலுள்ள ஜனாதிபதியின் சொந்த ஊரிலேயே  அவர் தோல்வியடைந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More