Home இந்தியாஜெயலலிதா மரணம் – 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு:-

ஜெயலலிதா மரணம் – 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு:-

by admin

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு தனது அரசாணையில் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் திகதி உடல்நல குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாள்கள் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் டிசம்பர் 5-ஆம் திகதி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக பொதுமக்களிடையே பெரும் சந்தேகங்கள் காணப்பட்டு வந்தநிலையில் அவர் மரணம் குறித்த சந்தேகங்களை போக்க தமிழக அரசு விசாரணை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையில் ஆணைக்குழுவினை அமைத்தது.

விசாரணை ஆணைக்குழுவினை அமைத்தமை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஆணைக்குழுவானது விசாரணை அறிக்கையை வரும் 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்த நாள் வரை நடந்தவை அனைத்தையும் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More