Home இலங்கையாழில் கஞ்சா கடத்த முற்பட்ட இருவர் கைது

யாழில் கஞ்சா கடத்த முற்பட்ட இருவர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் எழுபத்தைந்து கிலோ கேரள கஞ்சாவை கடத்த முற்பட்ட இருவரை வட்டுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், பண்ணாகம் சுழிபுரம் வீதியில் வைத்து இன்று அதிகாலை குறித்த இருவரும் செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து எழுபத்தைந்து கிலோ கேரள கஞ்சாவையும் மீட்டுள்ளனர்.

சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 55 மற்றும் 52 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். முப்பத்தி இரண்டு சிறிய பொதிகளில் அடைக்கப்பட்டு இந்த கஞ்சா கடத்திச்செல்லப்பட்டிருந்தது. குறித்த கஞ்சாவினை விற்பனை செய்யும்நோக்கில் வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்;படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More