Home உலகம்விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வைத்தியருக்கு விமான நிறுவனம் நட்டஈடு வழங்கியுள்ளது

விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வைத்தியருக்கு விமான நிறுவனம் நட்டஈடு வழங்கியுள்ளது

by admin


அமெரிக்காவில் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 69 வயதான மருத்துவர் டேவிட் டோ என்பவருக்கு    சிக்காகோ யுனைடெட் எயர் லைன்ஸ்  விமான நிறுவனம் நட்டஈடு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கிதனால் தெரிவுசெய்யப்பட்ட நால்வரை விமானத்தில் இருந்து வெளியேறச்சொன்ன நிலையில்  நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டிஇருப்பதால் வெளியேற முடியாது என  குறித்த வைத்தியர் தெரிவித்தமையினத் தொடா்ந்து அவர்  வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றப்பட்டார்.

இது தொடர்பில்  மருத்துவர்  விமான நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தநிலையில் அவருக்கு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More