Home இலங்கை லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு 13 வருடங்கள்!

லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு 13 வருடங்கள்!

by admin

இலங்கையின் பிரதான மூத்த ஊடகவியலாளராக இருந்த லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டு இன்று 13 ஆண்டுகள் கடந்துள்ளன. இலங்கையிலும், உலக அளவிலும் அவரது நினைவுதினம் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது.

தனது தந்தை கொலை செய்யப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், நீதியை நிலைநாட்டுவதை இலங்கை தலைவர்கள் தொடர்ந்தும் நிராகரித்து வருவதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, கடந்த வருடம் அமெரிக்காவின் The Washington Post பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார்.

கடந்த வருடம் (2021 ஜனவரி 2 ஆம் திகதி The Washington Post பத்திரிகை வௌியிட்ட அஹிம்சா விக்ரமதுங்கவின் கட்டுரையில், லசந்த விக்ரமதுங்கவின் கொலை, அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகள் தொடர்பில் ஆழமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தனது தந்தை, Anna Politkovskaya, ஜமால் கஸோக்ஜி ஆகியோரின் கொலைகளைப் பார்க்கும் போது ஊடகவியலாளர்களை படுகொலை செய்வது உலகில் அதிகரித்து வரும் சர்வாதிகாரத்தின் மற்றுமொரு விம்பமெனத் தெரிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Sunday Leader பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி காலை தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது அத்திட்டிய பகுதியில் படுகொலை செய்யப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை பின்தொடர்ந்து, கொலை செய்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், கொலை செய்யப்பட முன்னர், தனது காரிலிருந்த குறிப்பு புத்தகத்தில் தன்னை பின்தொடரும் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை, லசந்த விக்ரமதுங்க எழுதியிருந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்தது.

இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்று சில வாரங்களுக்கு பின்னர் சர்ச்சைக்குரிய மேலும் சில சம்பவங்கள் பதிவாகின.

2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் கடத்தப்பட்ட இரண்டு இளைஞர்களின் தீக்கிரையாக்கப்பட்ட சடலங்கள் அநுராதபுரம் கம்மிரிஸ் கஸ்வெவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் பின்னர், லசந்த விக்மரதுங்கவை கொலை செய்வதற்கு வந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளொன்று அத்திட்டிய சதுப்பு நிலமொன்றிலிருந்து மீட்கப்பட்டது.

விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் லசந்த விக்ரமதுங்கவின் சாரதியும் கடத்திச் செல்லப்பட்டதுடன், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

கல்கிசை காவற்துறையினர், முதலில் கிடைத்த தகவல்களின் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்தாலும் அது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவது தென்படவில்லை.

அதன் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களம் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச்சம்பவம் தொடர்பிலான விடயங்களை வௌிப்படுத்தி வந்த வேளையில், அந்த விசாரணை திடீரென காவற்துறை பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு மாற்றப்பட்டது.

தொலைபேசி தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு ஏற்ப, இந்த கொலை தொடர்பில் 2010 ஆம் ஆண்டு ஜேசுதாசன் என்ற ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர் விளக்கமறியலில் இருக்கும் போதே 2012 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.

எனினும், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி, ஆட்சி மாற்றம் இடம்பெறும் வரை லசந்த விக்மரதுங்கவின் கொலையுடன் தொடர்புபட்டதாக எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.

2015 ஆம் ஆண்டு இந்த விசாரணை மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றப்பட்டது.

அதன்படி, அவ்வேளையில் அதன் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர, காவற்துறை அத்தியட்சகர் சிசிர திசேரா மற்றும் காவற்துறை இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா ஆகியோர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அடக்கம் செய்யப்பட்டிருந்த லசந்த விக்ரமதுங்கவின் உடல் 2016 செப்டம்பர் மாதம் தடயவியல் விசாரணைகளுக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.

இது துப்பாக்கிச்சூட்டினால் மேற்கொள்ளப்பட்ட கொலை அல்லவென தடயவியல் விசாரணைகளின் போது உறுதி செய்யப்பட்டது.

2016 – 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, ஊடகவியலாளர்களான உபாலி தென்னகோன், கீத் நொயார் ஆகியோர் மீது தாக்குதல் மேற்கொண்ட குழுவிற்கும் இந்த கொலையை மேற்கொண்டவர்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக விசாரணைக்குழு வௌிப்படுத்தியது. உபாலி தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர் பின்னர் விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் என பெயரிடப்பட்டிருந்தார்.

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட காலத்தில், புலனாய்வு பிரிவின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றதாகக் கூறப்படும் கொழும்பு திரிபோலி எனப்படும் முகாமில் பணியாற்றிய சில உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டதுடன், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளையும் தொடர்புபடுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சில சந்தர்ப்பங்களில் இராணுவத்தின் சிலரும் இந்த சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டாலும் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் உரிய சந்தேகநபர்கள் இதுவரை பெயரிடப்படவில்லை.

இந்நிலையில், சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்ற காலத்தில் கல்கிசை காவல் நிலைய குற்றப்பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அவ்வேளையில் அந்த பிரதேசத்திற்கு பொறுப்பாகவிருந்த காவல் நிலைய பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அந்த அதிகாரிகளும் தற்போது பி​ணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

லசந்த விக்ரமதுங்கவின் கொலைச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 3 அதிகாரிகள் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர்.

ஷானி அபேசேகர தற்போது விளக்கமறியிலில் உள்ளதுடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர திசேராவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டு அரசியல் தஞ்சம் கோரி காவற்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நாட்டிலிருந்து தப்பிச்சென்றார்.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தமக்கு தொடர்ந்தும் நீதி கிடைக்காத நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்சலெட்டிற்கு இது குறித்து எழுத்து மூலம் அறிவித்தததாக அஹிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.

12 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை இன்னும் மர்மமாகவே உள்ளது.

லசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை!

March 7, 2021Add Comment

தனது தந்தை கொலை செய்யப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ள…

தந்தையின் கொலைக்கு ஐ நாவிடம் நீதி கோரியுள்ளார் லசந்தவின் மகள்!

January 10, 2021Add Comment

இலங்கையில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட…

அஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…

November 28, 2020Add Comment

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின்…

லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு 11 வருடங்கள் கழிந்தன….

January 8, 2020Add Comment

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு…

கோத்தாபயவை நான்கரை வருடங்களாக பாதுகாத்தமைக்கு மன்னிப்புக் கோருவீர்களா? ரணிலிடம் கேள்வி…

August 13, 2019Add Comment

கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த…

மேஜர் பிரபாத் புலத்வத்த மீண்டும் இராணுவத்தில் – CPJ அதிருப்தி…

May 16, 2019Add Comment

இலங்கையின் இராணுவப் புலனாய்வு அதிகாரி மேஜர் பிரபாத்…

கோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு….

April 8, 2019Add Comment

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய…

லசந்தவை கொன்றவர்களை தெரியும்- ஆதாரம் இல்லை – மகள் வந்தால் சொல்வேன் :

January 20, 2019Add Comment

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் நேரில்…

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி இடமாற்றம்

November 18, 2018Add Comment

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொள்ளை விசாரணைப்…

லசந்த – பிரகீத் – கீத் நொயார் தவிர – தமிழ் ஊடகவியலாளர்கள் பற்றி பேசப்படாமை வெட்கத்திற்கு உரியது…

September 28, 2018Add Comment

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் பேசுகையில்…

தேசிய புலனாய்வு சேவையின் பிரதானி, சிசிர மெண்டிஸிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை..

June 13, 2018Add Comment

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

சன்டே லீடர் பத்திரிகையின்…

லசந்த கொலைச் சந்தேக நபர் இரகசிய அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தார்…

June 1, 2018Add Comment

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….

சண்டே லீடர் பத்திரிகையின்…

லசந்த கொலையுடன் தொடர்புடைய முன்னாள் காவல்துறை அதிகாரிகளின் விளக்க மறியல் நீடிப்பு

May 1, 2018Add Comment

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சண்டே லீடர் பத்திரிகையின்…

லசந்த கொலை தொடர்பான தகவல்களை முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபரே மூடிமறைத்தார்

March 3, 2018Add Comment

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சண்டே லீடர் பத்திரிகையின்…

லசந்தவின் குறிப்பு புத்தகத்தை மாயமாக்கிய பிரசன்ன நணயக்ககார கைது:-

February 14, 2018Add Comment

குளோபல் தமிழ்ச் செய்தியார்..

சண்டே லீடர் பத்திரிகையின்…

லசந்த கொலை தொடர்பில் காவல்துறை உத்தியோகத்தர் கைது

February 1, 2018Add Comment

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சண்டே லீடர் பத்திரிகையின்…

லசந்த கொல்லப்பட்ட தினம் அவருடைய அலுவலகம் ராணுவ புலனாய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டுள்ளதா?

January 18, 2018Add Comment

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த…

ராஜபக்ஸவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படும்…

January 9, 2018Add Comment

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 9 வருடங்களும்…

லசந்த கொலை தொடர்பில் ஊடகங்கள் கேள்வி எழுப்பவில்லை :

December 4, 2017Add Comment

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சண்டே லீடர் பத்திரிகையின்…

லசந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு ராஜதந்திர பதவி வழங்கப்பட்டது

April 23, 2017Add Comment

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த…

லசந்த கொலை குறித்த விபரங்களை மூடி மறைத்த சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் – உதய

March 28, 2017Add Comment

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த…

லசந்த கொலை குறித்த விசாரணைகளில் அரசியல் தலையீடு

March 12, 2017Add Comment

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த…

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை – மஹிந்த ராஜபக்ஸ

February 25, 2017Add Comment

தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது…

லசந்த கொலை தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் – சீ.பி.ஜே.

February 24, 2017Add Comment

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த…

‘ராஜபக்ஸக்களுக்கு தெரிந்தே லசந்த கொலை செய்யப்பட்டுள்ளார் என நம்புகிறேன்’ – சரத் பொன்சேகா:

January 21, 2017Add Comment

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சண்டே லீடர் பத்திரிகையின்…

மிக் கொடுக்கல் வாங்கல் குறித்து அம்பலப்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தும் என லசந்த அறிந்திருந்தார்

January 17, 2017Add Comment

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மிக் விமானக் கொடுக்கல்…

லசந்த கொலை செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் பூர்த்தியாகிய நிலையிலும் நீதி கிடைக்கவில்லை

January 8, 2017Add Comment

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சண்டே லீடர் பத்திரிகையின்…

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் விசாரணைகள் கிடப்பில் போடப்படவில்லை

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் விசாரணைகள் கிடப்பில் போடப்படவில்லை

November 19, 2016Add Comment

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊடகவியலாளர்கள் மீதான…

லசந்த கொலை தொடர்பில் மேலும் 12 புலனாய்வு உத்தியோகத்தர்களிடம் விசாரணை

October 30, 2016Add Comment

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சண்டே லீடர்…

லசந்த விக்ரமதுங்க கொலை சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

October 27, 2016Add Comment

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஊடகவியலாளர் லசந்த…

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More